ஜனாதிபதி பதவிக்கு டலஸ், ரணில் மற்றும் அனுரவின் பெயர்கள் பரிந்துரை !

டலஸ் அழகப்பெருமவின் பெயரை முன்மொழிந்தார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித், பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆமோதிப்பு அனுரகுமார திஸாநாயக்கவின் பெயரை முன்மொழிந்தார் விஜித ஹேரத், ஹரிணி அமரசூரிய ஆமோதிப்பு ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை தினேஷ் குணவர்தன முன்மொழிய அதனை ஆமோதித்தார் மனுஷ நாணயக்கார

பொருளாதாரத்தை விரைவாக மீட்டெடுக்க இலங்கைக்கு இந்தியா உதவும்

இலங்கைக்கு விரைவான மற்றும் பயனுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்தியா உதவும் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெறும் மாற்றம் சுமூகமாக இருக்க வேண்டும் என இந்தியா விரும்புகிறது என உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே…

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சஜித் : போட்டியில் இருந்து பின்வாங்கினார்

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பிற்காக தான் வேட்புமனுவைத் தாக்கல் செய்யப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். அதன் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவை வாபஸ் பெற்ற அவர், நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளதாக…

அடுத்த 24 மணி நேரத்திற்குள் திட்டங்களை முன்வைக்க வேண்டும்

ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திட்டங்களை அடுத்த 24 மணி நேரத்திற்குள் முன்வைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர்,…

ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விவகாரம் : உயர் நீதிமன்ற தீர்ப்பு இன்று

ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது. இந்த மனு நேற்று காமினி அமரசேகர, ஷிரான் குணரத்ன மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில்…

மகனின் பாதுகாப்பிற்காக அமெரிக்க செல்ல மறுத்துவிட்டு மீண்டும் நாடு திரும்புகின்றார் கோட்டா….!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நாடு திரும்ப தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் நாட்களில் சவுதி அரேபியா செல்லவுள்ளார். இம்மாத இறுதி வரை அங்கு தங்கியிருக்கும் கோட்டாபய…

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல்: சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் பொலிஸார்

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சமீப நாட்களாக சமூக ஊடகங்களில் பல்வேறு பதிவுகள் பரப்பப்பட்டு வருவதை அவதானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சில பயனர்கள் நாடாளுமன்றத்தில் வாக்களிக்கும் முறைகள் தொடர்பாக உறுப்பினர்களை நேரடியாக…

இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம்

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2வது பிரிவின் கீழ் இலங்கையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இலங்கை முழுவதும் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால…

எரிபொருள் விலை குறைப்பு – புதிய விலை விபரம் இதோ

இன்று இரவு 10 மணிமுதல் அமுலாகும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை குறைத்துள்ளது. அதன்படி பெட்ரோல் 92 ஒக்டேன் விலை 20 ரூபாயினால் குறைக்கப்பட்டு இன்று முதல் 450 ரூபாயாக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் 95…

திங்கட்கிழமை மற்றும் செவ்வாய் மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் நாளை திங்கட்கிழமை 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் மூன்று மணிநேர மின்வெட்டுக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி ABCDEFGHIJKLPQRSTUVW பகுதிகளில் பகலில் 1 மணி 40 நிமிடங்களும் இரவில் 1 மணி 20 நிமிடங்களும் மின்சாரம்…

தமிழருக்காக பாடுபடும் வேட்பாளருக்கே வாக்கு – விக்கி

தமிழ் சமூகத்தின் கருத்துக்களுக்கு செவிசாய்க்கும் தலைவருக்கே ஆதரவு என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூலை மாதம் 20ஆம் திகதி நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். சுதந்திரத்தின் பின்னரும்…

மக்கள் போராட்டத்திற்கு நூறு நாட்கள்

கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பமான போராட்டம் இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) 100 நாட்களை நிறைவு செய்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தி இளைஞர்கள் குழுவொன்று இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தது. இதேவேளை,…

வரலாறாக மாறிய மோசடி அரசியல்: எதிர்கட்சிக்கு செல்கின்றார் டலஸ்

அனைத்துக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். வரலாறாக மாறியுள்ள மோசடி அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதே தனது பிரதான இலக்கு என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கடந்த சில…

அவசர நிவாரணத் திட்டம்: பதில் ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

பொதுமக்களுக்கு எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் அவசர நிவாரண வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். நிவாரணம் வழங்குவதற்காக ஓகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்படும் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் மேலதிக நிதியை பயன்படுத்தவும்…

மஹிந்த மற்றும் பசிலுக்கு பயணத்தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜபக்ஷ சகோதரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை எதிர்வரும் 28ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என உயர்…

கொழும்பு துறைமுகத்திற்கு கப்பல் வந்துவிட்டது : காஞ்சன விஜேசேகர

40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று இன்று சனிக்கிழமை காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. சோதனைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார். இதனை அடுத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு உடனடியாக டீசல் விநியோகிக்கப்படும் என…

யார் வேட்பாளர் விரைவில் அறிவிப்போம்? ஆளும்கட்சியில் இருந்து விலகியவர்கள் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை விரைவில் அறிவிப்போம் என சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியில் இருந்து விலகி சுயாதீனமாக அறிவித்துக்கொண்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் நேற்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. தற்போதைய…

சஜித், டலஸ் போட்டியிடுவதாக அறிவிப்பு… காத்திருப்பு பட்டியலில் ரணில் !

புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. ஜனாதிபதி பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட எம்.பி.க்கள் பரிந்துரைக்கப்பட்டால், வாக்கெடுப்பு நடத்தப்படும் என நாடாளுமன்ற படைக்கல சேவிதர் தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் வேட்புமனுக்கள் கோரப்படும் போது, ​​அடுத்த ஜனாதிபதியாக ஆளும்கட்சி சார்பாக…

ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்ரமசிங்க – ஆளும்கட்சி ஆதரவு

ஜனாதிபதி பதவிக்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஆளும்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. ரணில் விக்கிரமசிங்க இதுவரை தனது வேட்புமனுவை அறிவிக்காவிட்டாலும், நாட்டின் அடுத்த ஜனாதிபதிக்கான போட்டியில் அவர் களமிறங்குவார் என நிபுணர்கள் கூறுகின்றனர். அந்தவகையில் அடுத்த ஜனாதிபதியை…

19 க்கு பின்னரே எமது நிலைப்பாடு – கூட்டமைப்பு

19 ஆம் திகதி வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பதில் ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதேசமயம் அவருக்குக் கீழ் பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் எனவும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.…

இராஜினாமா கடிதத்தை கையளித்தார் கோட்டா…. ! சிங்கப்பூர் பொலிஸார் எச்சரிக்கை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யப்பா அபேவர்தனவிற்கு அனுப்பி வைத்துள்ளார். சிங்கப்பூரை அடைந்துள்ள நிலையில் தனது செயலாளருக்கு இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது…

மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல் – முழு விபரம்

கொழும்பு மாவட்டத்தில் இன்று நண்பகல் 12 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி…

தனியார் ஜெட் விமானம் இருந்தால் மட்டுமே சிங்கப்பூர் பயணம் – மாலைதீவில் டிமாண்ட் வைத்த கோட்டா…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வர்த்தக விமான நிறுவனத்தில் ஏற மறுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்ல தனியார் ஜெட் விமானம் ஒன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாகவே அவரது இராஜினாமா இதுவரை அறிவிக்கப்படவில்லை…

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல் – அறிவித்தல் இதோ

நாளை (14) காலை 5 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டது.

விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி இலங்கையில் இல்லாத காரணத்தினால் ஜனாதிபதியின் அலுவலகத்தின் அதிகாரங்கள், கடமைகள் மற்றும் செயற்பாடுகளை நடைமுறைப் படுத்துவதற்கும், நிறைவேற்றுவதற்கும் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவை நியமிப்பதற்கான…

அமைதியை பேணுங்கள், அடுத்தவாரம் புதிய ஜனாதிபதி – பதில் ஜனாதிபதி ரணில்

அமைதியை பேணுமாறு பொதுமக்களிடம் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரச் சட்டத்திற்கு மத்தியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ஆயுதப் படைகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். பாதுகாப்புத் துறையினரின் ஆலோசனைக்கு அமைய, நாடு முழுவதும் அவசரகாலச்…

சிங்கப்பூர் செல்லவுள்ளார் ஜனாதிபதி கோட்டா? வெளியான முக்கிய தகவல்

மாலைதீவில் இருந்து இன்று மாலை கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூர் செல்லவுள்ளார் மாலைதீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று அதிகாலை நாட்டில் இருந்து புறப்பட்டு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவில் தஞ்சம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி தற்போது மாலைதீவில் உள்ள Waldorf…

சபாநாயகர் மஹிந்த யாப்பா சற்றுமுன்னர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சபாநாயகருக்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் அரசியலமைப்பின் பிரகாரம் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளார். விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு சபாநாயகர் மஹிந்த யாப்பா…

கொழும்பில் பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம்

கொழும்பில் உள்ள இலங்கையின் பிரதமர் அலுவலகத்திற்கு வெளியே திரண்டிருந்த போராட்டக்காரர்களை தடுக்க பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் பாதுகாப்பிற்காக தற்போது பல இராணுவம் குவிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி தர்ஸ்டன் கல்லூரிப் பக்கத்திலிருந்தும்…

பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் பலத்த இராணுவ பிரசன்னம்

கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் பாதுகாப்பிற்காக தற்போது பல இராணுவம் குவிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி தர்ஸ்டன் கல்லூரிப் பக்கத்திலிருந்தும் கிரீன் பாத் பக்கத்திலிருந்தும் பிளோவர் வீதியின் அனைத்து நுழைவாயில்களிலும் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவ்வழி ஊடக யாரும் வெளியே செல்லவோ,…