LIVE UPDATE | ஜப்னா கிங்ஸ் அணி 4 விக்கெட்களால் வெற்றி !!

79 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கோடு பதிலுக்கு களமிறங்கிய ஜப்னா கிங்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குஷால் மெண்டிஸ் எவ்வித ஓட்டங்களை பெறாமல் முதலாவது ஓவரில் அட்டமிழந்து வெளியேறினார்.

இதனை தொடர்ந்துவந்த ரோஸோவ் 6 ஓட்டங்களோடு சனகாவின் பந்துவீச்சில் ஹசார்ங்கவிடம் பிடிகொடுத்த ஆட்டமிழந்து வெளியேற ஜப்னா அணி 11 ஓட்டங்களை குவிந்திருந்தது.

பின்னர் 3 ஆவது ஒவரை வீசிய மத்தியூஸின் பந்துவீச்சில் பத்தும் நிசங்க ஆட்டமிழந்து வெளியேற ஜப்னா அணி 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

இதனை தொடந்து களமிறங்கிய சரித் அசலங்க அதிரடியாக விளையாடி 26 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஹசரங்கவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் 16 பந்துகளில் 25 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட, பின்னர் களமிறங்கிய ஒமர்சாய் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை அடிக்க ஜாப்னாவின் வெற்றி உறுதியானது.

அதன்படி நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கை 5.5 ஓவர்களில் கடந்து ஜாப்னா கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.

====

லங்கா பிரிமியர் லீக் தொடரில் ஜப்னா கிங்ஸ் அணிக்கு 79 ஓட்டங்களை கண்டி பல்கன்ஸ் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

மலை காரணமாக போட்டி தாமதமாக 7 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி அணி 5 விக்கெட்களை இழந்து 78 ஓட்டங்களை குவித்தது.

கண்டி அணி சார்பாக துடுப்பாட்டத்தில் மொஹமட் ஹாரிஸ் 30 ஓட்டங்களையும் சந்திமால் 21 ஓட்டங்களையும் அதிகபசித்தமாக பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் ஜேசன் பெரன்ரோப் 3 விக்கெட்களை சாய்த்தார். இந்நிலையில் 79 ஓட்டங்களோடு ஜப்னா அணி துடுப்பெடுத்தாடவுள்ளது.

——-

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 15ஆவது லீக் போட்டி, தற்போது ஆரம்பமாகியுள்ளது. இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜப்னா கிங்ஸ் அணி முதலில் கால்தடுப்பை தெரிவித்து செய்துள்ளது.

கொழும்பு-ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறுகின்ற இப்போட்டியில், ஜப்னா கிங்ஸ் அணியும் கண்டி பெல்கன்ஸ் அணியும் மோதுகின்றன.

மழையின் குறுக்கீடு காரணமாக போட்டி, 7 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டு போட்டி ஆரம்பமாகியுள்ள நிலையில் கண்டி அணி முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது.

————-

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 15ஆவது லீக் போட்டி, இன்னமும் சற்று நேரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொழும்பு-ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இப்போட்டியில், ஜப்னா கிங்ஸ் அணியும் கண்டி பெல்கன்ஸ் அணியும் மோதுகின்றன.

மழையின் குறுக்கீடு காரணமாக போட்டி, 7 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டு இன்னமும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.