சஞ்சய ராஜரத்தினத்தின் சேவை நீடிப்பை இரண்டாவது தடவையாக நிராகரித்தது அரசியலமைப்பு சபை !!

சட்ட மாஅதிபர் சஞ்சய் ராஜரத்தினத்திற்கு 6 மாத சேவை நீடிப்பு வழங்குவதற்கான ஜனாதிபதியின் யோசனையை அரசியலமைப்பு பேரவை மீண்டும் நிராகரித்துள்ளது.

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்திற்கு 6 மாதகால சேவை நீடிப்பை வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பரிந்துரை செய்திருந்தார்

முன்னதாக அரசியலமைப்பு பேரவை கூடியிருந்த போதிலும், சட்டமா அதிபரின் சேவை நீடிப்பு தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்திற்கு மேலும் 6 மாத சேவை நீடிப்பு வழங்குவதா, இல்லையா என்பது தொடர்பில் ஆராயஇன்று அரசியலமைப்பு பேரவை கூடியது.

சபாநாயகர் மஹிந்த யப்பா அபேவர்தன தலைமையில் கூடிய போது ஜனாதிபதியின் இந்த பரிந்துரைக்கு எதிராக 5 உறுப்பினர்களும் ஆதரவாக 3 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *