லங்கா பிரீமியர் லீக் : டிக்கெட் விற்பனை ஆரம்பம்

லங்கா பிரீமியர் லீக் தொடரில் கண்டியில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பமாகி உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இலங்கை ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் லங்கா பிரீமியர் லீக் தொடரில் கண்டியில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று மாலை தொடங்கியது.

லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5 ஆவது சீசன் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி கண்டி, தம்புள்ளை அணிகளுக்கு இடையில் நடைபெருக்கின்றது.

கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியை பார்வையிட விரும்புபவர்கள் Bookmyshow.com என்ற முகவரிக்கு சென்று பெற்றுக்கொள்ளலாம்.

அதன்படி மைதானத்தின் A Lower மற்றும் B Lower பிரிவிற்கு 750 ரூபாயும் Grand Stand Top Level Box ஐந்திற்கும் 3000 ரூபாயும் Grand Stand Top Level A ற்கு 1500 ரூபாயும் புல் தரைக்கு 200 ரூபாயும் அறவிடப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *