கடவுச்சீட்டு வழக்கில் டயானா கமகேவை சந்தேகநபராக பெயரிட்டார்

இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றமை தொடர்பான வழக்கில் டயானா கமகேவை சந்தேகநபராக பெயரிட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

இதன்படி, உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இருப்பினும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் தனது இல்லத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.