விஜயதாச, கீர்த்தி உடவத்தவிற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு

சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைவராக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும், கட்சியின் பதில் பொதுச் செயலாளராக கீர்த்தி உடவத்தவும் செயற்படுவதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க சமர்ப்பித்த மனுவை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கட்சியின் தலைவராக அமைச்சர் ராஜபக்ஷவும், பதில் பொதுச் செயலாளராக உடவத்தவும் செயற்படுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி கடந்த 16 அன்று தாக்கல் செய்த மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

எவ்வாறாயினும், முறைப்பாட்டாளர் தனது முறைப்பாட்டைத் திருத்துவதற்கும், உரிய தடை உத்தரவுக்கான காரணத்தை சரியாக குறிப்பிடவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில் திருத்தப்பட்ட மனு நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவால் முன்வைக்கப்பட்ட நிலையில் இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.