இலங்கையின் பிரஜை அல்லாத ஒருவர் அரசியல் கட்சியொன்றை பதிவு செய்வதற்கு நாட்டின் சட்டத்தில் எந்த தடையுமில்லை என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இலங்கை சட்டத்தின்படி இலங்கை பிரஜை இல்லாத ஒருவர் தேர்தலில் போட்டியிடவோ வாக்களிக்கவோ நாடாளுமன்ற உறுப்பினராகவோ முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பு மனுக்களில் டயனா கமகே கையெழுத்திடவில்லை எனவும் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான அரசியல் கூட்டணியை முறித்துக் கொண்ட காலஞ்சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களான மங்கள சமரவீர, மறைந்த ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகியோரால் அபே ஜாதிக பெரமுன உருவாக்கப்பட்டது.
அபே ஜாதிக பெரமுனவின் பொதுச் செயலாளராக ருவான் பெர்டினாண்டாஸ் இருந்த நிலையில், டயானா கமகேவின் கணவர் அப்பதவியை பொறுப்பேற்றார்.