இலங்கை சாதகமான பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்யும்

2024 ஆம் ஆண்டில் இலங்கை சாதகமான பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்யும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் முதல் தடவையாக இந்த வளர்ச்சி பதிவாகியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

எனவே மத்திய வங்கி பின்பற்றும் குறுகிய நேர்மறையான பொருளாதாரப் பாதையில் நீடிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

கடன் மறுசீரமைப்பு வேலைத் திட்டத்தை நிறைவு செய்வதற்கான இறுதிக்கட்டத்தில் இலங்கை இருப்பதாகவும் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

குறுகிய காலத்தில் பொருளாதார நிலைத்தன்மையை கிட்டத்தட்ட அடைந்து விட்டதாகவும் த்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்கான நீண்ட கால திட்டத்தின் ஒரு பகுதியாக, எதிர்வரும் ஆண்டுகளில் 4% முதல் 5% வரையிலான பொருளாதார வளர்ச்சி வீதத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.