ஒரே ஒரு போட்டியில் மாத்திரம் இலங்கைக்காக விளையாடிய யாழ் வீரர் சன்ரைசர்ஸ் அணியில் !!!
காயம் காரணமாக ஐ.பி.எல் போட்டியில் இருந்து வனிந்து ஹசரங்க விளையாடாத நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக யாழ் வீரர் வியாஸ்காந்த் மாற்று வீரராக பெயரிடப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2024 இன் எஞ்சிய போட்டிக்காக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைந்துள்ளார் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அறிவித்துள்ளது.
இலங்கை அணி சார்பாக ஒரே ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியில், குறிப்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியின் போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அவர் விளையாடியிருந்தார்.
இதேநேரம் 22 வயதான விஸ்காந்த், சமீபத்தில் முடிவடைந்த சர்வதேச T20 லீக் இல் MI எமிரேட்ஸ் அணிக்காக 4 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
மேலும் பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் சட்டோகிராம் சலஞ்சர்ஸ் அணியிலும் லங்கா பிரீமியர் லீக்கில் ஜப்னா கிங்ஸ் அணியையும் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.