கொழும்பில் விமானப் படையினரின் மாபெரும் கண்காட்சி நிகழ்ச்சி !

கொழும்பு போர்ட் சிட்டியில் “எதிர்காலத்திற்கு” என்ற தொனிப்பொருளின் கீழ் மே 29 முதல் ஜூன் 2 வரை 2024 ஆம் ஆண்டுக்கான கொழும்பு விமான கண்காட்சி, பாதுகாப்பு கண்காட்சியை இலங்கை விமானப்படை நடத்த உள்ளது.

5 நாட்களும் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி நள்ளிரவு 12 மணிக்கு நிறைவடையும் இந்த நிகசிக்கான நுழைவுச் சீட்டு வயது வந்தவருக்கு 200 ரூபாயாகவும், சிறுவர்களுக்கு 100 ரூபாயாகவும் அறவிடப்படும் என விமானப்படை அறிவித்துள்ளது.

இந்நிகழ்ச்சி நீர் விளையாட்டுகள், சாகசங்கள், விமானக் கண்காட்சிகள், ஸ்கை டைவிங் உள்ளிட்ட சாகச நிகழ்ச்சிகளும் நடைபெறும் என விமானப் படை அறிவித்துள்ளது.

இதற்காக தேசிய, சர்வதேச ரீதியில் உள்ள பாதுகாப்பு துறை நிறுவனங்களை வந்து தங்கள் தயாரிப்புகள், திறன்கள், யோசனைகளை காட்சிப்படுத்துமாறு விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார்.

ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் விற்பனை நிலையங்கள், இசைக்குழுக்களின் இசை கச்சேரிகள், சாகச சவாரிகள், பஷன் ஷோக்கள், ட்ரோன் மற்றும் லேசர் ஷோக்கள் இடம்பெறும் அதேநேரம் சர்வதேச உணவுத் திருவிழாவும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுலாத்துறை அமைச்சு, பாதுகாப்பு, வெளிநாட்டு அமைச்சுக்கள் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு நடைபெறுவதாக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கி, திறமையான அதிகாரிகளை விமானப்படைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான வாய்ப்பாக இந்நிகழ்ச்சி அமையும் அமைகிறது என உதேனி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த கண்காட்சிக்கு வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் இதற்காக விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.