ஓய்வில் இருந்து திரும்பி இரண்டு நாட்களில் தடை : இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து வனிந்து இடைநீக்கம்

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர், மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான அறிவிப்பை வெளியிட்ட சில நாட்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் முடிவடைந்த பங்களாதேஷுக்கு எதிரான தொடரின் 3 வது ஒருநாள் போட்டியில் நடுவரின் முடிவில் கருத்து வேறுபாடு காட்டி ஐசிசி நடத்தை விதி 2.8ஐ அவர் மீறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் 3 ஆவது ஒருநாள் போட்டியின் 37வது ஓவரில் நடுவர் ஒருவரிடமிருந்து ஹசரங்க தனது தொப்பியை பறித்து, நடுவரை கேலி செய்த சம்பவம் நடந்தது.

இந்நிலையில் 26 வயதான அவருக்கு 50 சதவீத அபராதமும் மூன்று demerit புள்ளிகளும் விதிக்கப்பட்டன. இதன் மூலம், 24 மாதங்களில் எட்டு டிமெரிட் புள்ளிகளை அவர் பெற்றுள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் தம்புள்ளையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது T20 போட்டியில் மூன்று டீமெரிட் புள்ளிகளைப் பெற்று ஏற்கனவே ஐந்து டீமெரிட் புள்ளிகளில் இருந்தார்.

சமீபத்திய டிமெரிட் புள்ளிகள் சேர்க்கப்பட்டதால், அவர் இப்போது எட்டு டிமெரிட் பாயின்ட் தடையைத் தாண்டிவிட்டார், இது பிரிவு 7.6 இன் படி நான்கு இடைநீக்க புள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளது.

நான்கு சஸ்பென்ஷன் புள்ளிகள் காரணமாக, பங்களாதேஷ்க்கு எதிரான இரண்டு ICC உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் டெஸ்ட் அல்லது நான்கு ODI அல்லது T20 போட்டிகளில் விளையாடுவதற்கு ஹசரங்க தகுதியற்றவராக இருப்பார்.

ஹசரங்க டெஸ்டில் ஓய்வு பெற்று இருந்திருந்தால், இந்த ஆண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ண தொடரில் நான்கு ஆட்டங்களை அவர் தவறவிட்டிருக்கலாம்.

இதேநேரம் மூன்றாவது போட்டியின் முடிவில், நடுவர்டன் கைகுலுக்கியாபோது நடைபெற்ற சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட குஷல் மெண்டிஸ்க்கு 3 டிமெரிட் புள்ளிள் அளிக்கப்பட்டுள்ளது. மெண்டிஸைப் பொறுத்தவரை, இது 24 மாதங்களில் அவர் செய்த முதல் குற்றமாகும்.