வட, கிழக்கு மாகாணங்களில் நாளை 41 பாகை செல்சியஸ் வெப்பம் !!
வட, கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் நாளை வெப்பநிலை மேலும் உயர்வடையும் என்றும் காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 வரை வெப்பநிலை 41 பாகை செல்சியஸை அண்மிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கரையோரப் பகுதிகளில் ஓரளவு வெப்பம் குறைவாக காணப்பட்டாலும் உள் நிலப்பகுதிகளில் வெப்பநிலை மிக உயர்வாக காணப்படும் என யாழ்.பல்கலைகழக விரிவுரையாளர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தின் வவுனியா,மாங்குளம், முறிகண்டி, நட்டாங்கண்டல், துணுக்காய், ஓமந்தை, கரிப்பட்ட முறிப்பு, சின்னத்தம்பனை, பாலைப் பாணி, மூன்றுமுறிப்பு, ஐயன் குளம், மடு, கீரி சுட்டான், தட்டாங்குளம், பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக வட மாகாணத்தின் உள்நிலப்பகுதிகளின் பல இடங்களில் வெப்ப அலை வீசுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் இருப்பினும் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மிதமான மழை வீழ்ச்சி பதிவாகும் என்றும் கூறியுள்ளார்.
அதிகரித்த வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு அன்றாட செயற்பாடுகளை செயற்பாடுகளை திட்டமிட்டுக்கொள்ளுமாறு யாழ். பல்கலைகழக விரிவுரையாளர் நா.பிரதீபராஜா பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.