டி20 உலகக் கிண்ணம் : இங்கிலாந்து அணியில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்

இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்கப்போவதில்லை என இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.

கிரிக்கெட்டின் சகலதுறை வீரராக தனது முழுப் பங்களிப்பை வழங்குவதற்காக தனது பந்துவீச்சு திறமையை மேலும் வலுப்படுத்த கடுமையாக உழைத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அனைத்து வடிவங்களிலும் சகலதுறை வீரராக இருக்க தான் செய்யும் தியாகமாக ஐ.பி.எல். தொடரிலும் உலகக்கிண்ண தொடரிலும் விளையாட போவதில்லை என பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.

முழங்கால் அறுவை சிகிச்சையை அடுத்து ஒன்பது மாதங்கள் பந்துவீசாமல் இருந்த தனக்கு சமீபத்திய இந்திய டெஸ்ட் சுற்றுப் பயணம் மிக மோசமாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

சிறந்த உடற்தகுதி இல்லாத காரணத்தினால் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக அவர் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தார்.

எதிர்வரும் ஜூன் மாதம் இரண்டாம் திகதி உலகக் கிண்ண இருபதுக்கு 20 தொடர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *