பாரிஸ் ஒலிம்பிக்கில் கைல் அபேசிங்க, கங்கா செனவிரத்ன !!

பிரான்ஸில் ஜூலை 26 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 11 ஆம் திகதி வரை பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதில் இலங்கை சார்பாக ஆண்கள் சார்பாக நீச்சல் வீரர் கைல் அபேசிங்கவும் பெண்கள் சார்பாக நீச்சல் வீராங்கனை கங்கா செனவிரத்னவும் களமிறங்குகின்றனர்.

நோய்வாய்பட்டிருந்த 24 வயதான கைல் அபேசிங்கவிற்கு இந்த ஒலிம்பிக் வாய்ப்பு 5 ஆண்டுகளுக்கு பின்னர் கிடைத்துள்ளது.

ஆண்களுக்கான 100 மீற்றர் பிரீஸ்டைல் போட்டியில் 50.99 வினாடிகளில் கடந்து சாதனை படைத்ததே கைல் அபேசிங்கவின் சிறந்த பெறுபேறாகும்.

இதேவேளை, பக் ஸ்ட்ரோக் போட்டிகளில் அதிக புள்ளிகளை பெற்றுள்ள 20 வயதான கங்கா செனவிரத்ன, டோஹாவில் நடந்த கடந்த உலக சம்பியன்ஷிப்பிலும் சிறப்பாக செயல்பட்டிருந்தார்.

இலங்கை நீர் விளையாட்டு சங்கத்தின் அறிவிப்புடன், கைல் அபேசிங்கவும் கங்கா செனவிரத்னவும் ஒலிம்பிக்கில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி களமிறங்குகின்றனர்.

தேசத்தின் நம்பிக்கைகளையும் அபிலாஷைகளையும் சுமந்து உலகின் சிறந்த வீரர்களுக்கு எதிராக அவர்கள் பாரிஸில் போட்டியிட உள்ளனர்.