யாழ். வட்டுக்கோட்டையில் இளைஞன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் : மல்லாகம் நீதிமன்றின் அதிரடி உத்தரவு

யாழ். வட்டுக்கோட்டையில் இளைஞனைக் கடத்திப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வரை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை தனது மனைவியுடன் காரைநகருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீடு திரும்பியவர்களை பொன்னாலை பகுதியில் உள்ள கடற்படை முகாம் முன்பாக வைத்து வன்முறை கும்பல் கடத்தி சென்றது.

கணவனை ஒரு வாகனத்திலும், மனைவியை ஒரு வாகனத்திலும் கடத்திய வன்முறை கும்பல், மனைவியை சித்தங்கேணி பகுதியில் இறக்கி விட்டு சென்றது. அத்தோடு குறித்த இளைஞனை கடுமையாகே சித்திரவதை செய்து படு காயத்தோடு வட்டுக்கோட்டை வைத்தியசாலை முன்பாக வீசி சென்றனர்.

படுகாயத்துடன் காணப்பட்டவரை வைத்தியசாலை பணியாளர்கள் மீட்டு யாழ். போதனாவில் அனுமதித்த நிலையில் குறித்த இளைஞன் சிக்சிஹாய் பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அராலி பகுதியை சேர்ந்த நான்கு பேரை கைது செய்தனர்.

இதனை அடுத்து வர்களை அண்ணாரிஅயதினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியா போது 48 மணிநேரம் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

அத்தோடு மற்றைய சந்தேக நபரை எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது. அத்தோடு அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கும் கட்டளையிட்டது.

இந்நிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நால்வரையும் இன்று நீத்திமன்றில் முற்படுத்திய வேளை அவர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை இளைஞன் கடத்தப்படும் போது கடற்படை முகாமில் இருந்த நான்கு கடற்படையினரிடம் பொலிஸார் வாக்குமூலங்களை பெற்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *