தெற்காசியாவிலேயே அதிக மின் கட்டணம் இலங்கையில் : தகவல்களை நிராகரித்தார் அமைச்சர்

தெற்காசியாவிலேயே அதிக மின் கட்டணம் இலங்கையிலேயே அறவிடப்படுவதாக வெரிட்டே ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தரவுகளை மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நிராகரித்துள்ளார்.

மின் கட்டம் அதிகம் என்பதை அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஒப்புக்கொண்டுள்ள போதும் பொதுமக்களை தவறாக வழிநடத்த கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மாதத்திற்கு 100, 300 மற்றும் 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தப்பட்டதன் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டதாக வெரிட்டே ஆராய்ச்சி நிறுவனம் கூறியது.

எவ்வாறாயினும், 5 இலட்சத்திற்கும் குறைவான பாவனையாளர்களே 100, 300 மற்றும் 500 யூனிட்களுக்கு மேல் நுகர்வதாக குறிப்பிட்டு குறித்த தரவுகளை காஞ்சன விஜேசேகர நிராகரித்துள்ளார்.

இதேநேரம் அடுத்த எட்டு மாதங்களுக்குள் நாட்டின் புதிய புதுப்பிக்கத்தக்க தேவைக்கு தற்காலிக தீர்வை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அதற்கான முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.