CBC TAMIL NEWS : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தனது டெஸ்ட் அறிமுகத்தை பெற்றுக்கொண்ட சாமிக குணசேகர தலையில் பந்து தாக்கியதை அடுத்து உபாதை காரணமாக வெளியேறினார்.
இன்று காலை போட்டி ஆரம்பமாகிய போது நவீத் சத்ரானின் பௌன்சர் பந்து சாமிக குணசேகர வின் ஹெல்மட்டை பதம்பார்த்தது.
கசுன் ராஜித உடனடியாக மாற்று வீரராக அங்கீகரிக்கப்பட்டதை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸின் ஆரம்பத்தில் பந்துவீசவும் அனுமதிக்கப்பட்டார்.
24 வயதான சாமிக குணசேகர மைதானத்தை விட்டு வெளியேறிய பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நவீத் சத்ரானின் பவுன்சருக்கு டக் செய்ய முயன்றபோது, குணசேகர மீது பந்து ஹெல்மெட்டின் மேல் பகுதியில் மோதி விக்கெட் கீப்பரைக் கடந்து நான்கு ஓட்டங்களுக்கு சென்றது.
இதனை தொடந்து அவருக்கு வழங்கப்பட்ட போதும் அந்த நேரத்தில் சாமிக குணசேகர சோதனையில் தேர்ச்சி பெற்றதை அடுத்து துடுப்பெடுத்தாட அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும் ஆனால், 110வது ஓவரில் மீண்டும் வலி ஏற்பட்டதை அடுத்து அவர் மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.