Sri Lanka vs India LIVE UPDATE : 170 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்ட இலங்கை அணி : 43 ஓட்டங்கள் வெற்றிபெற்ற இந்தியா !!

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி தற்போது கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்ய இந்திய அணி முதலில் களமிறங்கியது.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 213 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பாக அணித்தலைவர் சூரியகுமார் யாதவ் அதிகபட்சமாக 58 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் மதீஷ பதிரன 4 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க, டில்ஷான் மதுஷங்க, அசித பெர்னாண்டோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

214 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை அணி 6 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 55 ஓட்டங்களை குவித்தது.

இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில், பெத்தும் நிசங்க 31 ஓட்டங்களையும் குஷால் மெண்டிஸ் 21 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

இதனை தொடர்ந்து 8.4 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் 84 ஓட்டங்களுக்கு இலங்கை அணி முதலாவது விக்கெட்டை இழந்தது. குஷால் மெண்டிஸ் 45 ஓட்டங்களோடு அட்டமிழந்து வெளியேறினார்.

இதன்பின்னர் குஷால் ஜனித் பெரேரா ஆடுகளம் புகுந்தார். அதன்படி 10 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 99 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் பெத்தும் நிசங்க 48 ஓட்டங்களோடு ஆட்டமிழக்காது களத்தில் உள்ளார். தொடர்ந்து 5 ஆவது ஓவரின் முதலாவது பந்தில் பத்தும் நிசங்க ஆட்டமிழந்து வெளியேறினார்.

அவர் ஆட்டமிழக்க இலங்கை அணி 140 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை இழந்திருந்தது. பின்னர் அதே ஓவரின் இறுதி பந்தில் குஷால் பெறவும் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன் பின்னர் களம்புகுந்த எவரும் பெரிதாக சோபிக்க தவறியதை அடுத்து இலங்கை அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 170 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனால் இந்திய அணி 43 ஓட்டங்களினால் வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கின்றது.

———————

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி தற்போது கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்ய இந்திய அணி முதலில் களமிறங்கியது.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 213 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பாக அணித்தலைவர் சூரியகுமார் யாதவ் அதிகபட்சமாக 58 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் மதீஷ பதிரன 4 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க, டில்ஷான் மதுஷங்க, அசித பெர்னாண்டோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி தற்போது கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்ய இந்திய அணி முதலில் களமிறங்கியது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய சுப்மன் கில் மற்றும் ஜேஷுவால் ஜோடியின் அதிரடி ஆரம்பம் காரணமாக 6.1 ஓவர்கள் நிறைவில் இரண்டு விக்கெட்களை இழப்பிற்கு 74 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பந்துவீச்சில் வனிந்து ஹசரங்கவும் டில்ஷான் மதுஷங்கவும் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர். இதனை தொடந்து 10 ஓவர் பந்து பரிமாற்றம் நிறைவுக்கு வந்தது.

அதன்படி 2 விக்கெட்களை மாத்திரம் இழந்த இந்திய அணி 112 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக சூரியகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து ஆட்டத்தின் டிரிங்ஸ் ப்ரேக்கின்போது இந்திய அணி 13 ஓவர்கள் நிறைவில் 146 ஓட்டங்களை குவிந்திருந்தது. அணித்தலைவர் சூரியகுமார் யாதவ் ஆட்டமிழக்காது 58 ஓட்டங்களை குவித்தார்.

இப்போட்டியில் இலங்கை அணி வீரர்கள் கிட்டத்தட்ட நான்கு பவுண்டரிகளை தவறவிட்டது இதேநேரம் இரண்டு பிடியெடுப்புகளையும் தவறவிட்டது.

சிறப்பிக்க விளையாடிய சூரியகுமார் யாதவ் மதீஷ பதிரனவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.