லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 20ஆவது லீக் போட்டியில், தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணி 124 ஓட்டங்களை கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
கொழும்பு-ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில், தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணியும் கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொஹமட் நபி 40 ஓட்டங்களையும் சமிந்து விக்ரமசிங்க 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணியின் பந்துவீச்சில், பினுர பெனார்டோ 3 விக்கெட்டுகளையும் துனித் வெல்லாலகே 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
இன்னமும் சற்று நேரத்தில், 124 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடுகிறது தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணி!
லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 20ஆவது லீக் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது.
கொழும்பு-ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில், தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணியும் கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதில் தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணிக்கு மொஹமட் நபியும் கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணிக்கு திசர பெரேராவும் தலைமை தாங்குகின்றனர்.
இந்தப் போட்டியை பொறுத்தவரை இப்போட்டியில் தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணி மிகப்பெரிய கட்டாய வெற்றியை பெற வேண்டும். அவ்வாறு வெற்றிபெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.
ஏற்கனவே கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், அந்த அணி மிகப்பெரிய வெற்றியை பெற்றால், புள்ளிபட்டியலில் முதலிடத்தை பிடித்து, இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதிப் போட்டியில் விளையாட முடியும்.
இதன்படி இன்னமும் சற்று நேரத்தில், தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.