சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுக் கூட்டம் இலங்கையில்

2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுக் கூட்டம் இந்த ஆண்டு இலங்கையில் நடைபெறுகின்றது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுக் கூட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா, கிழக்கு ஆசியா, பசிபிக், ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய 108 உறுப்பு நாடுகளில் இருந்து 220 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இதில் கலந்துகொள்கின்றனர்.

இந்த ஆண்டு மாநாட்டில், ஒலிம்பிக் வாய்ப்பை மூலதனமாக்குதல் என்ற தலைப்பில், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது.

இது இலங்கைக்கு கிடைத்த நல்ல சந்தர்ப்பம் என்றும் உலக நாடுகளின் பிரதிநிதிகளை அழகிய தீவுக்கு அன்புடன் வரவேற்பதாகவும் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் சம்மி சில்வா தெரிவித்தார்.

வருடாந்திர மாநாட்டில் முக்கிய கூட்டங்கள், பயிற்சி பட்டறைகள் என பல நிகழ்வுகள் நடைபெறும் என்றும்  விளையாட்டின் எதிர்கால நலனுக்காக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.