டெஸ்ட் வீரர்களின் கொடுப்பனவுகளை இரட்டிப்பாக்கியது இலங்கை கிரிக்கெட் சபை !!

இலங்கை அணியின் டெஸ்ட் வீரர்களுக்கான கொடுப்பனவுகளில் கணிசமான அதிகரிப்பை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

உற்சாகத்தையும், டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கியத்துவத்தையும் வீரர்களுக்கு வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வீரரின் போட்டி ஒப்பந்தங்களின் அடிப்படையில் இந்த அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்றும் இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ஒரு சர்வதேச போட்டிக்கு ஒரு டெஸ்ட் வீரருக்கான மொத்த கட்டணம் 15,000 டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 44 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும்.