2024 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடருக்காக 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் பதிவு செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
ஐசிசி முழு உறுப்பு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் உட்பட 24 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், அடுத்த ஏலத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.
தமிம் இக்பால், டிம் சவுத்தி, ரஸ்ஸி வான் டெர் டுசென், ஜிம்மி நீஷம், முஷ்பிகுர் ரஹிம், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரிலீ ரோசோவ், ஷாய் ஹோப், டாஸ்கின் அகமட், லுங்கி என்கிடி ஆகியோர் அடங்குவர்.
நசீம் ஷா, ரஹ்மானுல்லா குர்பாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, கொலின் முன்ரோ, இஷ் சோதி, மார்க் சாப்மேன், ஜேசன் பெஹ்ரென்டோர்ஃப், ஆண்ட்ரே பிளெட்சர், ஓஷேன் தாமஸ், கீமோ பால் மற்றும் ஃபேபியன் ஆலன்.
இவர்களைத் தவிர, உஸ்மான் கவாஜா, தப்ரைஸ் ஷம்சி, எவின் லூயிஸ், முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமட், ரீஸ் டோப்லி, இப்திகார் அகமட், மொஹமட் நவாஸ், குல்பாடின் நைப், இப்ராஹிம் சத்ரான் ஆகியோர் உள்ளனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடர் ஜூலை முதலாம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நடைபெறும். இதன் ஏலம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.