19 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான முத்தரப்புத் தொடரில் இங்கிலாந்து அணியை 108 ஓட்டங்களினால் வீழ்த்தி இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.
காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற 19 வயதிற்கு உட்பட்ட இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 226 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக ரஷ்மிகா செவ்வந்தி 59 ஓட்டங்களை குவித்தார்.
பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட அமுருதா சுரேன்குமார் 2 விக்கெட்களையும் சோபியா 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்.
இதனை தொடந்து 227 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி 23.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 118 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.
அவ்வணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை க்ரூகொக் 26 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இலங்கை அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய சாமோதி பிரபோதா 5 விக்கெட்களையும் ராஷ்மி நேத்ராஞ்சலி 4 விக்கெட்களையும் வீழ்த்தினர்.