எதிர்காலம் குறித்து தீர்மானிக்கவில்லை – சமரி அத்தபத்து

சர்வதேச கிரிக்கெட்டில் தனது எதிர்காலம் குறித்து இலங்கை மகளிர் அணியின் தலைவர் சமரி அத்தபத்து தெளிப்படுத்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இருபதுக்கு இருபது தொடரை இலங்கை அணி கைப்பற்றிய நிலையில் இது “தனது நாட்டிற்கான கடைசி கடமை” என முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.

தற்போது நீக்கப்பட்ட முகநூல் பதிவில் அவர் ஓய்வு பற்றிய குறிப்புகளை வெளியிட்டுள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்து வந்த நிலையில் சமரி அத்தபத்து இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள 34 வயதான சமரி அத்தபத்து, தான் இன்னும் ஓய்வு குறித்து முடிவு செய்யவில்லை என்றும் ஓய்வு குறித்து பின்னர் பேசலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

முதலில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடர் குறித்தும் உலகக்கிண்ண தகுதி சுற்றுப் போட்டி குறித்துமே தான் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் 25 ஆம் திகதி தொடங்கும் தகுதிச் சுற்று போட்டியில் ஸ்கொட்லாந்து, தாய்லாந்து, உகாண்டா, அமெரிக்கா ஆகிய அணிகளோடு இலங்கை அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் தகுதிச் சுற்று போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறும்.