2024 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் போட்டிகள் ஜீலை மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
அதன்படி ஜீலை மாதம் முதலாம் திகதி 3 மணிக்கு லங்கா பிரிமியர் லீக் தொடர் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டு இரவு 7:30 ற்கு முதலாவது போட்டி நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் கடந்தமுறை சம்பியன் பட்டம் வென்ற பி லவ் கண்டி அணியும் தம்புள்ளை அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஜீலை மாதம் முதலாம் திகதி முதல் 16 ஆம் திகதிவரை போட்டிகள் நடைபெற்று 18 ஆம் திகதி முதலாவது தகுதிகாண் சுற்றுப்போட்டியும் வெளியேற்று சுற்றுப்போட்டியும் நடைபெறவுள்ளன.
இதனை தொடந்து 20 ஆம் திகதி இரண்டாம் தகுதிகாண் சுற்றுப்போட்டியும் 21 ஆம் திகதி இறுதி போட்டியும் நடைபெறவுள்ளன.
அறிவிக்கப்பட்ட தினத்தில் போட்டி தடைபடும் பட்சத்தில் 22 ஆம் திகதி இலங்க பிரிமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 லங்கா பிரீமியர் லீக் போட்டிகளை கண்டி பல்லேகல மைதானம், தம்புள்ளை, கொழும்பு ஆர் பிரேமதாச மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் போட்டிகள் ஜீலை மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் போட்டிக்கான அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.#lka #SriLanka #LPL2024 pic.twitter.com/E6Bo4XTzhA
— Vithushan Jeyachandran (@imjvithu) April 8, 2024