சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்திற்கு இலங்கை கிரிக்கெட் சபையின் உதவி

கொழும்பில் உள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் கடின பந்து கிரிக்கெட் விளையாட்டினை மேம்படுத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை வசதி செய்து கொடுத்துள்ளது.

அண்மையில் 15, 19 வயதிற்கு உட்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாட சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயம் திட்டமிட்டது.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் சபை வழங்கிய இந்த உதவிக்கு பாடசாலையின் அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.

இதில் பயிற்சிகளை மேற்கொண்டு தேசிய பெண்கள் அணியை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் சிறந்ததோர் அணியை உருவாக்குவோம் என 19 வயதிற்குட்பட்ட பாடசாலை அணியின் தலைவர் கூறியுள்ளார்.