உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லுமா இலங்கை ??

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பை இலங்கை அணி மேலும் பிரகாசப்படுத்தியுள்ளது.

பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்டில் 192 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், இலங்கை அணி தொடரை 2-0 என தன்வசப்படுத்தியது.

இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசையில் 50 சதவீத புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு இலங்கை அணி முன்னேறியுள்ளது.

இந்த தரவரிசையில் முதலிடத்தில் இந்தியாவும் இரண்டாம் இடத்தில் அவுஸ்ரேலியாவும் மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து அணியும் உள்ளன.

ஆண்டின் இறுதியில் நியூசிலாந்திற்கு எதிராவும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அவுஸ்ரேலிய அணிக்கு எதிராகவும் என இன்னும் இரண்டு தொடர்களை இலங்கை அணி சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது.

இதனை தொடந்து இங்கிலாந்தில் ஓகஸ்ட் மாதம் தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட தொடரிலும் இலங்கை அணி விளையாடவுள்ளது.