கச்சத்தீவு குறித்து இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ தகவலையும் இந்தியா அனுப்பவில்லை என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் கச்சத்தீவு விவகாரம் தமிழகத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவை மீண்டும் ஒப்படைப்பது குறித்து இந்தியாவிடம் இருந்து கோரிக்கை கிடைத்தால் அதற்கு வெளிவிவகார அமைச்சு பதில் வழங்கும் எனறும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இதுவரை கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது என்றும் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேநேரம் தமிழ்நாட்டு மீனவர்களின் வாக்குகளை குறிவைத்து அண்ணாமலை எடுத்துள்ள இந்த நடவடிக்கையை கண்டிப்பதாக யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.