கஷூன் ராஜிதவுக்கு பதிலாக அசித்த பெர்னாண்டோ !!

மார்ச் 30 ஆம் திகதி நடைபெறும் பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கசுன் ராஜிதவிற்கு பதிலாக அசித்த பெர்னாண்டோ அணியில் இடம்பெற்றுள்ளார்.

சில்ஹெட்டில் நடந்த முதல் டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுக்கள் உட்பட மொத்தமாக 8 விக்கெட்களை கசுன் ராஜித கைப்பறியது அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

இருப்பினும் குறித்த போட்டியில் ராஜிதவுக்கு இடது மேல் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில் தொடந்து சிகிச்சைபெற்று வருகின்றார்.

அசித்த பெர்னாண்டோ 13 டெஸ்ட் போட்டிகளில் 41 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். குறிப்பாக பங்களாதேஷுக்கு எதிராக தனது இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 13 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.