பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக பசிலுக்கு பதிலாக நாமல் நியமனம் !!

பொதுஜன பெரமுனவின் புதிய தேசிய அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு விஜேராம வீதியில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (27) கூடிய கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போதே இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டது.

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வகித்துவந்த அந்த பதவி தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ளது.