பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்ய பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 286 ஓட்டங்களை குவித்துள்ளது.

பங்களாதேஷ் அணியின் முதலாவது விக்கெட் முதலாவது ஓவரின் 3 ஆவது பந்தில் பறிபோனது லிட்டன் தாஸ் எவ்வித ஓட்டங்களை பெற்றக்கொள்ளாமல் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனை தொடந்து சௌமியா சர்க்கார் மற்றும் நஜ்மல் ஹுசைன் ஜோடி 50 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்டபோது அணித்தலைவர் நஜ்மல் ஹுசைன் 40 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார்.

தொடந்து ஆரமபத்துப்பட்ட வீரர் சௌமியா சர்க்கார் 68 ஓட்டங்களோடும் மொஹமதுல்லா எவ்வித ஓட்டத்தையும் பெறாமல் ஆட்டமிழக்க பங்களாதேஷ் அணி 130 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது.

இதனை அடுத்து களமிறங்கிய முஷ்பிகுர் ரஹீம் 25 ஓட்டங்களோடும் மெஹிதி ஹசன் மிராஸ் 12, தன்சிம் ஹசன் சாகிப் 18 ஓட்டங்களோடும் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இருப்பினும் நிதானமாக ஆடிய டவ்ஹித் ஹ்ரிடோய் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 96 ஓட்டங்களையும் தஸ்கின் அஹமட் 18 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக வனிந்து ஹசரங்க 4 விக்கெட்களையும் தில்ஷான் மதுஷங்க 2 விக்கெட்களையும் பிரமோத் மதுஷன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினார்.

இதனை தொடந்து பதிலுக்கு களமிறங்கிய இலங்கை அணி பதும் நிசங்க மற்றும் சரித் அசலங்கவின் சிறப்பான துடுப்பாட்டம் காரணமாக 2 ஆவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

287 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களம் இறங்கிய இலங்கை அணி 47 ஓவர்கள் 01 பந்துகள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 287 ஓட்டங்களைப் பெற்றது.

அணித்தலைவர் குசல் மெண்டிஸ் 13 பந்துகளில் 16 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம ஒரு ஓட்டத்தையும், ஜனித் லியனகே 16 பந்துகளில் 09 ஓட்டங்களையும், வனிந்து ஹசரங்க 16 பந்துகளில் 25 ஓட்டங்களையும், அவிஷ்க பெர்னாண்டோ ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

பங்களாதேஷ் அணியின் ஷரிபுல் இஸ்லாம் மற்றும் தஸ்கின் அஹமட் ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களையும் தன்சிம் ஹசன் சாகிப், மெஹிதி ஹாசன் மிராஸ் மற்றும் தைஜுல் இஸ்லாம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில் இறுதி போட்டி விறுவிறுப்பாக மாறியுள்ளது.

இப்போட்டியில் 114 ஓட்டங்களைப் பெற்ற இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பதும் நிஸ்ஸங்க ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.