பொதுவான தொலைநோக்குப் பார்வையின் கீழ் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைப்க்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அவமானங்கள், அச்சுறுத்தல்கள், சேறு பூசல்கள், சதித்திட்டங்கள், சவால்களுக்கு மத்தியில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் நின்ற வாக்காளர்களுக்கு நன்றி என தெரிவித்தார்.
மக்கள் நமக்கு ஒரு செய்தியைக் கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் அனைத்து எதிர்க்கட்சி சக்திகளும் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் கூறினார்.
ஆறு மாதங்களில், அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது ஏறும் அது இந்த தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டுவதாகவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
“ஜனநாயகத்தின் பாதுகாவலர்களாக, நாம் பொதுமக்களின் விருப்பத்தை மதிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சியை ஒன்றிணைத்து வழிநடத்தவு தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.