சுமந்திரனும் அமைச்சு பதவியும்…. என்ன சொல்கின்றது தேசிய மக்கள் சக்தி !!

தமது அரசாங்கத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படாது என தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

அமைச்சு பதவிகளை வழங்குவது தொடர்பாக எந்த வித கலந்துரையாடலும் நடைபெறவில்லை என்றும் அதற்கான எந்தத் தேவையும் இல்லை என்றும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

பொதுத் தேர்தலை அடுத்து அமைக்கப்படும் அரசாங்கத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சு பதவியை வழங்க அரசாங்கத்திற்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில குற்றம் சுமத்தியிருந்தார்.

சுமந்திரனின் அமைச்சுப் பதவி தொடர்பாக எவ்வித ஆட்சேபோனையும் தெரிவிக்காத உதய கம்மன்பில, அரசாங்கம் தமிழரசு கட்சியோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தின் இரண்டு நிபந்தனைகள் குறித்து கவலையடைவதாக குறிப்பிட்டிருந்தார்.

முதல் நிபந்தனை, புதிய அரசியலமைப்பை கொண்டுவந்து சமஸ்டி அடிப்படையிலான தீர்வை வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும் இந்த அணுகுமுறை நாட்டு மக்களை இன ரீதியாக பிரிக்கும் முயற்சியாக தான் கருவத்துவதாகவும் கூறியிருந்தார்.

இரண்டாவது நிபந்தனையின் கீழ், இலங்கைக்கு எதிரான 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு, இராணுவ வீர்களை சிக்க வைக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

வரலாற்றில் எந்த அரசாங்கமும் ஆட்சிக்கு வந்து முதல் மாதத்திற்குள் அரசியல் கூட்டணியை பாதுகாக்க இவ்வாறு செயல்பட்டதில்லை என்றும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்கள் இந்த விடயத்தை கவனத்தில்கொள்ள வேண்டும் என்றும் உதய கம்மன்பில கடுமையாக சாடியிருந்தார்.

இதேநேரம் தமக்கு அமைச்சுப் பதவி கிடைக்குமாயின் அதனை பரிசீலிக்க வேண்டும் என்பதே தமது கருத்து என முன்னாள் நாடா ளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

அமைச்சுப்பதவிகளை எடுக்க கூடாது என்றும் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் கட்சியின் கொள்கை கிடையாது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமது அரசாங்கத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படாது என தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

அமைச்சு பதவிகளை வழங்குவது தொடர்பாக எந்த வித கலந்துரையாடலும் நடைபெறவில்லை என்றும் அதற்கான எந்தத் தேவையும் இல்லை என்றும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் அதற்கு பின்னரும் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு தேவை இல்லை என தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது என்றும் தாம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.