இரண்டு புதுமுக வீரர்களோடு இங்கிலாந்து செல்கின்றது இலங்கை அணி !!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
தனஞ்சய டி சில்வா தலைமையிலான இலங்கை அணிக்கு குஷால் மெண்டிஸ் பதில் தலைவராக செயற்படுவார் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இந்த அணியில் திமுத் கருணாரத்ன, நிஷான் மதுஷக, பத்தும் நிசங்க, அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், சடீர சமரவிக்கிரம ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
சுழற்பந்து வீச்சாளர்களான பிரபாத் ஜெயசூரிய, ரமேஷ் மெண்டிஸ் ஜெபிரி வண்டர்சே ஆகியோரும் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இதேநேரம் வெக்கபந்துவீச்சாளர்களான அசித்த பெர்னாண்டோ, விஸ்வ பெர்னாண்டோ, காசும் ராஜித, லஹிரு குமார, புதுமுக வீரர்களாக நிசல தாரக, மிலான் ரத்னாயக்க ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.