32 ஓட்டங்களினால் இந்தியாவை வீழ்த்தியது இலங்கை : தொடரில் 1- 0 என முன்னிலை !!!

இலங்கை அணி நிர்ணயித்த 241 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

அதன்படி முதலாவது பவர்பிளே நிறைவில் எவ்வித விக்கெட் இழப்பும் இன்றி இந்திய அணி 80 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதன்பின்னர் 13 ஆவது ஓவரை வண்டர்சே வீச அந்த ஓவரின் 3 ஆவது பந்தில் ரோஹித் ஷர்மா 64 ஓட்டங்களோடு ஆட்டமிழந்து வெளியேறினார்.

இப்போட்டியில் அகில தன்ஜய வீசிய பந்தில் விராட் கோலி ஆட்டமிழந்ததாக நடுவர் அறிவித்தபோதும் அதனை ரிவியூ செய்த போது ஆட்டமிழப்பு இல்லை என திரையில் வெளியானது.

இதனால் மைதானத்தில் ரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டு இருந்த நிலையில் அடுத்த ஓவரில் சுப்மன் கில் 35 ஓட்டங்களோடு வண்டர்சேயின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனை தொடர்ந்து ஆடுகளம் புகுந்த சிவம் டுபே அதே ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த ஓவரில் வண்டர்சே இரண்டு விக்கெட்களை சாய்த்தார்.

தொடர்ந்து ஆடுகளம் புகுந்த Shreyas Iyer 7 ஓட்டங்களோடும் KL Rahul ஓட்டங்கள் எதனையும் பெறாமல் ஆட்டமிழக்க 24 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்களை பெற்றது.

தற்போது ஆடுகளத்தில் உள்ள அக்சர் பட்டேல் மற்றும் வொஷிங்டன் சுந்தர் ஆகியோர் நிதானமாக துடுப்பெடுத்தாடி வருகின்றனர். இருப்பினும் இறுதியில் அவர்கள் இருவரும் ஆட்டமிழக்க இந்திய அணி 190 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

இறுதியில் 41 ஆவது ஓவரில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 208 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இதன்மூலம் 32 ஓட்டங்களினால் இலங்கை அணி வெற்றிபெற்று ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கின்றது.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 6 விக்கெட்களை வீழ்த்திய வண்டர்சே தெரிவு செய்யப்பட்டார்.

————————–

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியின் தலைவர் சரித் அசலங்க முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளார்.

அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பத்தும் நிசங்க, எவ்வித ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ளமால் மொஹமட் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனை தொடந்து 17 ஆவது ஓவரின் இறுதி பந்தில் சிறப்பாக விளையாடி 40 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட அவிஷக பெர்னாண்டோ ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன்போது இலங்கை அணி 74 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது மறுமுனையில் குஷால் மெண்டிஸ் 25 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுள்ளார்.

பின்னர் 19 ஆவது ஓவரின் முதலாவது பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் குஷால் மெண்டிஸ் ஆட்டமிழந்து வேலியவ்ற்றினார். இதன்போது இலங்கை அணி 79 ஓட்டங்களை பெற்றது.

பந்துவீச்சில் வொஷிங்டன் சுந்தர் இரண்டு விக்கெட்களையும் மொஹமட் சிராஜ் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினார். பின்னர் அணித்தலைவர் சரித் அசலங்க ஆடுகளம் புகுந்தார்.

இதனை தொடந்து 25 ஓவர்களில் இலங்கை அணி 100 ஓட்டங்களை கடந்தது. பின்னர் இலங்கை அணியின் 4 ஆவது விக்கெட் 27 ஆவது ஓவரில் இழைக்கப்பட்டது.

அக்சர் பட்டேல் வீசிய பந்தை அடித்தட்டு முட்பட்ட சதீர சமரவிக்கிரம, விராட் கோலியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்து வெளிறினார். இதன்போது அணியின் ஓட்ட எண்ணிக்கை 111 ஆகும்.

இதன்பின்னர் அசலங்க மற்றும் ஜனித் லியனகே ஜோடி நிதானமாக துடுப்பெடுத்தாடி வரும் நிலையில் இலங்கை அணி 33 ஓவர்களில் 136 ஓட்டங்களை குவித்துள்ளது.

இதன்பின்னர் குல்தீப் யாதவின் பந்துவீச்சில் ஜனித் லியனகே 12 ஓட்டங்களோடு ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்போது இலங்கை அணி 5 விக்கெட்களை இழந்து 136 ஒட்டங்களை பெற்றது.

இதன்பின்னர் ஜோடி சேர்ந்த கமிந்து மெண்டிஸ் மற்றும் துனீத் வெல்லாலகே ஆகியோர் அணியின் மொத்த ஓட்ட எண்ணைக்கையை 200 ஆக உயர்த்தினர்.

இருப்பினும் 47 ஆவது ஓவரில் வெல்லாலகே 39 ஓட்டங்களோடு ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் 47 ஓவர்களில் இலங்கை அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 211 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 240 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பந்துவீச்சில் வொசிங்டன் சுந்தர் 3 விக்கெட்களையும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *