இந்திய அணிக்கு 231 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!
ஒருநாள் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியக் கிரிக்கெட் அணிக்கு 231 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை கிரிக்கெட் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 230 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, துனித் வெல்லாலகே ஆட்டமிழக்காது 67 ஓட்டங்களையும் பெத்தும் நிஸங்க 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஹர்ஸ்திப் சிங் மற்றும் அக்ஸர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து இன்னமும் சற்று நேரத்தில், இந்தியக் கிரிக்கெட் அணி 231 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடவுள்ளது.