மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார சுமையை குறைக்க நடவடிக்கை !!

மீண்டும் ஜனாதிபதியாக மக்கள் தன்னை தெரிவு செய்தால், நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார சுமையை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது முன்னெடுக்கப்படும் பொருளாதார அபிவிருத்தி திட்டங்களை முன்னோக்கி கொண்டு சென்று அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக அவர் கூறியுள்ளார்.

பொருளாதாரத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்தி சிறந்ததொரு எதிர்காலத்தை வழங்குவேன் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களின் வாயிலாக நாட்டு மக்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் வரியை குறைப்பதாவும், பொதுமக்களுக்கு சலுகைகளை வழங்குவதாகவும் எதிர்க்கட்சியினர் தவறான கருத்தை முன்வைத்து வருவதாகவும் அவ்வாறு செய்தால் நாடு மீண்டும் அதலபாதாளத்திற்கு ஸ்னேருவிடும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டிருந்தார்.