லங்கா பிரிமியர் லீக் தொடரின் இறுதி போட்டியில் 185 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கோடு ஜப்னா கிங்ஸ் அணி களமிறங்கியது.
போட்டியின் முதலாவது ஓவரின் முதலாவது பந்துவீச்சில் பெத்தும் நிசங்க ஆட்டமிழந்து வெளியேறினார். இதனை அடுத்து ரஸோவ் ஆடுகளம் புகுந்தார்.
அதன்படி 5 ஓவர்கள் நிறைவில் ஜப்னா கிங்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 43 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஆடுகளத்தில் ரஸோவ், குஷால் மெண்டிஸ் ஆகியோர் உள்ளனர்.
முதலாவது பவர் பவர்பிளே நிறைவில் 63 ஓட்டங்களை ஜப்னா அணி அடித்தது, ரொசோவ் 29 ஓட்டங்களை மெண்டிஸ் 32 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்டனர்.
இதன்பின்னர் 10 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 110 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது, குஷால் மெண்டிஸும் ரஸோவும் அரைச்சம் அடித்தனர்.
லங்கா பிரிமியர் லீக் தொடரில் இவர்கள் இருவரும் பெற்றுக்கொண்டதே அதிக இணைப்பாட்டமாக பதிவாகியது. குறிப்பாக இவர்கள் இருவரும் 170 ற்கும் மேற்பட்ட ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்டனர்.
இறுதியில் 15.3 ஆவது ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரமே இழந்து ஜப்னா கிங்ஸ் அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. இது ஜப்னா கிங்ஸ் அணி வெல்லும் 4 ஆவது பட்டம் ஆகும்.
லங்கா பிரிமியர் லீக் தொடரின் இறுதி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய காலி மார்வெல்ஸ் அணி 184 ஓட்டங்களை குவித்துள்ளது. இதனால் ஜப்னா கிங்ஸ் அணிக்கு 185 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5 ஆவது லங்கா பிரிமியர் லீக் தொடரின் இறுதி போட்டி தற்போது ஆரம்பமாகியுள்ளது. இன்றைய போட்டியையை காண பெருமளவிலான ரசிகர்கள் மைதானத்திற்கு வருகைதந்துள்ளனர்.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜப்னா கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி காலி அணி முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது.
காலி அணியின் ஆரம்ப துடுப்பட்ட்ட வீரர்களான அலெக்ஸ் ஹீல்ஸ், நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் களம்புகுந்துள்ளனர்.
இருப்பினும் 4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 13 ஓட்டங்களோடு காலி அணி தடுமாறியது, பந்துவீச்சில் ஜேசன் பரன்ரோப் 2 விக்கெட்களை சாய்த்தார்.
இதன் பின்னர் முதலாவது பவர்பிளே நிறைவுக்கு வந்தது இதில் காலி அணி 21 ஓட்டங்களை மாத்திரமே குவிந்திருந்தது. இதுவே லங்கா பிரிமியர் லீக் போட்டி ஒன்றில் பவர் பிளேயில் ஒரு அணி பெற்றுக்கொண்ட குறைந்தளவிலான ஓட்ட எணிக்கையாகும்.
ஆட்டத்தின் ட்ரிங்க்ஸ் பிரேக் வரை 9 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் 3 விக்கெட்களை வீழ்த்தி 40 ஓட்டங்களை பெற்றிருந்தது. காலி அணி சார்பாக Tim Seifert 14 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுள்ளார்.
இதனை தொடந்து வியாஸ்காந்த் வீசிய 12 ஆவது ஓவரில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு நான்கு ஓட்டத்தை பறக்கவிட்டார் Tim Seifert, இருப்பினும் அடுத்த ஓவரில் 47 ஓட்டங்களோடு ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் 15 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 116 ஓட்டங்களை காலி மார்வெல்ஸ் அணி பெற்றுக்கொண்டது. பின்னர் பானுக ராஜபக்ஷ அதிரடி காட்ட காலி அணியின் ஓட்ட எண்ணிக்கை அதிகரித்தது.
அதன்பிரகாரம் 23 பந்துகளில் பானுக ராஜபக்ஷ அரைச்சம் கடந்தார். இறுதியில் 20 ஓவர்கள் நிறைவில் காலி அணி 06 விக்கெட்கள் இழப்பிற்கு 184 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் அதிரடி காட்டிய பானுக 82 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
——————
5 ஆவது லங்கா பிரிமியர் லீக் தொடரின் இறுதி போட்டி தற்போது ஆரம்பமாகியுள்ளது. இன்றைய போட்டியையை காண பெருமளவிலான ரசிகர்கள் மைதானத்திற்கு வருகைதந்துள்ளனர்.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜப்னா கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி காலி அணி முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது.
இப்போட்டி ஆரம்பமாகி சுருதி நேரத்தில் யோகனியின் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
தற்போது போட்டி ஆரமபமாகியுள்ளது. காலி அணியின் ஆரம்ப துடுப்பட்ட்ட வீரர்களான அலெக்ஸ் ஹீல்ஸ், நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் களம்புகுந்துள்ளனர்.