188 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி கண்டி பல்கன்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சந்திமாலும், பிளச்சரும் களமிறங்கினர்.
இதில் 4 ஆவது ஓரின் முதலாவது பந்துவீச்சில் சந்திமால் ஆட்டமிழந்து வெளியேற கண்டி அணி 48 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
மறுமுனையில் அதிரடி காட்டிய கண்டி பல்கன்ஸ் அணி வீரர் பிளேச்சர் 16 பந்துகளில் 37 ஓட்டங்களோடு ஆட்டமிழக்காது களத்திலுள்ளார்.
இதனை தொடந்து மொஹமட் ஹாரிஸ் களம் புகுந்தார். இதனை தொடர்ந்து 5 ஓவர்கள் நிறைவில் 52 ஓட்டங்களை கண்டி அணி பெற்றுக்கொண்டது.
பின்னர் 15 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு கண்டி அணி 126 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் வியாஸ்காந்த் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
இதன் பின்னர் கண்டி அணிக்கு மேலும் 4 விக்கெட்களே மீதமிருக்க 24 பந்துகளில் 53 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
இருப்பினும் பாபியன் அலனின் பந்துவீச்சில் மத்தியூஸ், சானக ஆகியோர் ஆட்டமிழந்து வெளியேற கண்டி அணிக்கு இறுதி இரண்டு ஓவர்களில் 38 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
அதன்படிகளத்தில் இருந்த ரமேஷ் மெண்டிஸ் மற்றும் பவன் ரத்னாயக்க ஆகியோர் அதிரடியை காட்ட இறுதி ஓவரில் 17 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
இருப்பினும் இறுதி ஓவரில் கண்டி அணியால் 16 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது. இதனால் ஜப்னா கிங்ஸ் அணி ஒரு ஓட்டத்தால் வெற்றிபெற்றது.
————-
2024 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெறப்போகும் இரண்டாவது அணி எது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தற்போது ஆர். பிரேமதாச மைதானத்தில் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்கான இரண்டாவது வெளியேற்று சுற்று போட்டி தற்போது ஆரம்பமாகியிருக்கின்றது.
3 முறை சம்பியன் பட்டம் வென்ற ஜப்னா கிங்ஸ் அணியும் நடப்பு சம்பியனான கண்டி அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தற்போது இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கண்டி பல்கன்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி முதலில் ஜப்னா கிங்ஸ் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது.
அந்தவகையில் 5 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் ஜப்னா கிங்ஸ் அணி எவ்வித விக்கெட் இழப்பும் இன்றி 44 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இதில் ஜப்னா கிங்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான பத்தும் நிசங்க மற்றும் குஷால் மெண்டிஸ் ஆகியோரின் சிறப்பான துப்பட்டம் காரணமாக வலுவான நிலையில் ஜப்னா அணி உள்ளது.
இதனை அடுத்து 6 ஆவது ஓவர் சதுரங்க டி சில்வா வீசிய பந்தில் பத்தும் நிசங்க 18 ஓட்டங்களோடு ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடர்ந்து 9 ஓவர்கள் நிறைவில் ஜப்னா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 80 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதில் குஷால் மெண்டிஸ் ஆட்டமிழக்காது 53 ஓட்டங்களோடு களத்தில் உள்ளார்.
பின்னர் 14 ஓவர்கள் நிறைவில் ஜப்னா அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 116 ஓட்டங்களை பெற்றுள்ளது. பந்துவீச்சில் சதுரங்க டி சில்வா மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இறுதியில் 20 ஓவர்கள் நிறைவில் ஜப்னா கிங்ஸ் அணி 7 விக்கெட்களை இழந்து 187 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அதிரடியாக விளையாடி குஷால் மெண்டிஸ் சதமடித்தார். இது லங்கா பிரிமியர் லீக்கில் அவரது முதலாவது சேதமாகும். அதேநேரம் ரி20 கிரிக்கெட்டில் அவர் அடுத்த இரண்டாவது சதமாகும்.
——————-
2024 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெறப்போகும் இரண்டாவது அணி எது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தற்போது ஆர். பிரேமதாச மைதானத்தில் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்கான இரண்டாவது வெளியேற்று சுற்று போட்டி தற்போது ஆரம்பமாகியிருக்கின்றது.
3 முறை சம்பியன் பட்டம் வென்ற ஜப்னா கிங்ஸ் அணியும் கண்டி பல்கன்ஸ் அணியும் தற்போது பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதேநேரம் நடப்பு சம்பியனான கண்டி அணி இம்முறையும் சம்பியன் பட்டதை தக்கவைத்துக்கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்தோடு 3 முறை சம்பியன் பட்டம் வென்ற ஜப்னா கிங்ஸ் அணி, இம்முறை கண்டி அணிக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்றைய போட்டியின்போது மழை பெய்யாது என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் வானிலை தற்போது சீரான நிலையிலேயே காணப்படுகின்றது.
தற்போது இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கண்டி பல்கன்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
அதன்படி முதலில் ஜப்னா கிங்ஸ் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.