LPL 2024 LIVE UPDATE : இரண்டாவது தகுதிகாண் சுற்று போட்டிக்கு கண்டி அணி தகுதி

லங்கா பிரிமியர் லீக் போட்டியின் இரண்டாவது தகுதிகாண் சுற்று போட்டிக்கு கண்டி பல்கன்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது.

கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை 2 விக்கெட்களால் வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெரும் இரண்டாவது தகுதிகாண் சுற்று போட்டிக்கு முனனேறியது.

160 என்ற வெற்றி இலக்கோடு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கண்டி அணி 6 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 51 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

கொழும்பு அணி சார்பாக ஆண்ட்ரே பிளச்சர் 20 ஓட்டங்களையும் மொஹமட் ஹாரிஸ் 10 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தனர்.

பந்துவீச்சில் பினுர பெர்னாண்டோ 2 விக்கெட்களையும் இசித விஜேசுந்தர ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 12 ஓவர்கள் நிறைவில் கொழும்பு அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 102 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் மதீச பதிரன 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

———-

2024 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் தொடரின் முதலாவது வெளியேற்று சுற்று போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.

கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கும் கண்டி பல்கன்ஸ் அணிக்கும் இடையில் இப்போட்டி தற்போது போட்டி நடைபெறுகின்றது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கண்டி பல்கன்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது. முதலாவதாக கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி துடுப்பெடுத்தாடுகின்றது.

2.5 ஓவர்கள் வீசப்பட்ட போது முதலாவது விக்கெட் இழக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அடுத்த பந்தில் கிளைன் பிலிப்ஸ் ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்க 2 விக்கெட்களை இழந்து 25 ஓட்டங்களை அணி பெற்றிருந்தது.

கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 6 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 45 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அவ்வணியின் 3 நிபுன் தனஞ்சய 14 ஓட்டங்களோடு அட்டமிழந்து வெளியேறினார்.

தொடர்ந்து விளையாடிய கொழும்பு அணி 16 ஓவர்கள் நிறைவில் 5விக்கெட்களை இழந்து 123 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன் பின்னர் பவர் ப்ளாஸ்ட் ஓவர்கள் முடியும் போது 138 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன்போது சதீர சமரவிக்கிரம 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இறுதியில் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களை கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி பெற்றுக்கொண்டது. இறுதி ஓவரில் மட்டும் இரண்டு விக்கெட்கள் அடுத்தடுத்து போனது.

இருப்பினும் மொஹமட் ஹசினன் ஹெட்ரிக் எடுக்கத் தவறினார். கொழும்பு அணி சார்பாக சதீர அதிகபட்சமாக 62 ஓட்டங்களை குருபாஸ் 30 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் மொஹமட் ஹசினன் 3 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர். இதனை தொடந்து 160 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கோடு கண்டி அணி துடுப்பெடுத்தாடவுள்ளது.