மகளிர் T20 ஆசியக் கிண்ணம் : இலவசமாக பார்க்க அனுமதி !!

2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் T20 ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் பொதுமக்கள் இலவசமாக பார்க்க முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

தம்புள்ளை மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியை காணவரும் ரசிகர்களை இலவசமாக அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இப்போட்டிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இதில் UAE நேபாளத்தை பிற்பகல் 2 மணிக்கு எதிர்கொள்கிறது. இரவு 7 மணிக்கு பாகிஸ்தானை இந்தியா எதிர்கொள்கிறது.

இலங்கை மகளிர் அணியின் முதல் போட்டி பங்களாதேஷ் அணியோடு 20ஆம் திகதி இரவு 7 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் T20 ஆசிய கிண்ண தொடரில் பங்கேற்பதற்காக மலேசியா, நேபாளம், ஐக்கிய அரபு இராஜ்ஜியம், தாய்லாந்து ஆகிய நாடுகள் இலங்கை வந்துள்ளன.

அதே நேரத்தில் பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா ஆகிய அணிகள் நாளை இலங்கை வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *