LIVE UPDATE எல்.பி.எல்.: கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணி 7 விக்கெட்டுகளால் அபார வெற்றி!

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின், 19ஆவது லீக் போட்டியில், கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணி 7 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.

கொழும்பு-ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணியும் காலி மார்வெல்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய காலி மார்வெல்ஸ் அணி, 19.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டிம் செய்பர்ட் 44 ஓட்டங்களையும் பானுக ராஜபக்ஸ 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கொழும்பு ஸட்ரைக்கர்ஸ் அணியின் பந்துவீச்சில், மதிஸ பத்திரன 4 விக்கெட்டுகளையும் துனித் வெல்லாலகே மற்றும் சதாப் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 139 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கொழும்பு ஸ்;ட்ரைக்கஸ் அணி, 18.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் கொழும்பு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொஹமட் வசிம் 50 ஓட்டங்களையும் க்ளென் பிலிப்ஸ் ஆட்டமிழக்காது 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தம்புள்ளை அணியின் பந்துவீச்சில், உதான, தீக்ஷன மற்றும் சஹான் ஆராச்சிகே ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 4 விக்கெட்டுகளை சாய்த்த மதிஸ பத்திரன தெரிவுசெ;யப்பட்டார்.

தம்புள்ளை அணியை எளிதாக வீழ்த்தி கண்டி அணி அபார வெற்றி!

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின், 18ஆவது லீக் போட்டியில், அணி சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி பெல்கன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஆந்ரே பிளெட்சர் 60 ஓட்டங்களையும் கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களையும் அஞ்சலோ மத்தியூஸ் ஆட்டமிழக்காது 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணியின் பந்துவீச்சில், துஷான் ஹேமந்த 3 விக்கெட்டுகளையும் சொனால் தினுஷ 1 விக்கெட்டினையும் பெற்றுக்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, 223 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், கண்டி பெல்கன்ஸ் அணி 53 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, குசல் ஜனித் பெரேரா 74 ஓட்டங்களையும் மார்க் சப்மன் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கண்டி பெல்கன்ஸ் அணியின் பந்துவீச்சில், வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டுகளையும் தசுன் சானக 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக கண்டி பெல்கன்ஸ் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க தெரிவுசெய்யப்பட்டார்.

தம்புள்ளை அணிக்கு 223 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கண்டி அணி!

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின், 18ஆவது லீக் போட்டியில், தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணிக்கு கண்டி பெல்கன்ஸ் அணி, 223 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி பெல்கன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரில் பதிவான அணியொன்றின் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக இந்த ஓட்ட எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஆந்ரே பிளெட்சர் 60 ஓட்டங்களையும் கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களையும் அஞ்சலோ மத்தியூஸ் ஆட்டமிழக்காது 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணியின் பந்துவீச்சில், துஷான் ஹேமந்த 3 விக்கெட்டுகளையும் சொனால் தினுஷ விக்கெட்டினையும் பெற்றுக்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, இன்னமும் சற்று நேரத்தில் தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணி, 223 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடவுள்ளது.

கண்டி- தம்புள்ளை அணிகளுக்கிடையிலான போட்டி மழையால் போட்டி தாமதம்!

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின், 18ஆவது லீக் போட்டி மழையால் தாமதமாகியுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறுகின்ற போட்டியில், கண்டி பெல்கன்ஸ் அணியும் தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இன்னமும் நாணய சுழற்சி சுழற்றப்படவில்லை என்றாலும் கூட தற்போது மழையின் தாக்கம் குறைவடைந்து தெளிவான வானிலை நிலவுவதால், போட்டி இன்னமும் சற்று நேரத்தில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *