LPL LIVE UPDATE : சூப்பர் ஓவரில் தம்புள்ளை அணியை வீழ்த்தி கோல் மார்வெல்ஸ் !!

லங்கா பிரிமியர் லீக் தொடரின் 16 ஆவது போட்டியில் தம்புள்ளை அணியை வீழ்த்தி கோல் மார்வெல்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை அணி களத்தடுப்பை தெரிவு செய்த நிலையில் கோல் மார்வெல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதன்படி முதலில் களமிறங்கிய அலெக்ஸ் கீல்ஸ் அதிரடியாக விளையாடி 38 ஓட்டங்களையும் டிம் சிபெர்ட் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் துஷாந்த் ஹேமந்த, மொஹமட் நபி, நுவான் துஷார ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இதனை தொடந்து 149 என்ற வெற்றி இலக்கோடு தம்புள்ளை அணி துடுப்பெடுத்தாடியது.

20 ஓவர்கள் நிறைவில் 148 ஓட்டங்களை தம்புள்ளை அணி பெற்றதால் போட்டி சூப்பர் ஓவர்வரை சென்றது. இதன் பின்னர் சூப்பர் ஓவரில் முதலாவதாக களமிறங்கிய தம்புள்ளை அணி 2 விக்கெட்களை இழந்து 6 ஓட்டங்களை பெற்றது.

இதனை தொடர்ந்து 7 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்கோடு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல் மார்வெல்ஸ் அணி ஒரு பந்து மீதமிருக்க வெற்றிபெற்றது இறுதி பந்தில் அலெக்ஸ் கீல்ஸ் சிக்ஸர் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இதில் தம்புள்ளை அணி சார்பாக ரீசா ஹென்ரிக் ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்களை அதிரடியாக பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் மகேஷ் தீக்ஷன 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

 

——–

லங்கா பிரிமியர் லீக் தொடர் தொடர்பொது சூப்பர் ஓவருக்கு சென்றுள்ளது.

——-

தற்போது 149 என்ற வெற்றி இலக்கோடு துடுப்பெடுத்தாடிவரும் தம்புள்ளை மார்வெல்ஸ் அணி 5 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்களை இழந்து 43 ஓட்டங்களை பெற்றுள்ளது.

லங்கா பிரிமியர் லீக் தொடரில் தற்போது நடைபெற்றுவரும் போட்டியில் கோல் மார்வெல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 148 விக்கெட்களை இழந்து 9 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை அணி களத்தடுப்பை தெரிவு செய்த நிலையில் கோல் மார்வெல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதன்படி முதலில் களமிறங்கிய அலெக்ஸ் கீல்ஸ் அதிரடியாக விளையாடி 38 ஓட்டங்களையும் டிம் சிபெர்ட் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் துஷாந்த் ஹேமந்த, மொஹமட் நபி, நுவான் துஷார ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இதனை தொடந்து 149 என்ற வெற்றி இலக்கோடு தம்புள்ளை அணி துடுப்பெடுத்தாடவுள்ளது.

—–

அதன்படி துடுப்பெடுத்தாடிவரும் கோல் மார்வெல்ஸ் அணி 10 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 70 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பட்டத்தில் அலெக்ஸ் கீல்ஸ் 38 ஓட்டங்களோடு ஆட்டமிழக்க டிம் சிபெர்ட் 13 ஓட்டங்களோடு அட்டமிழக்கமால் துடுப்பெடுத்தாடி வருகின்றார்.

பந்துவீச்சில் டில்ஷான் மதுஷங்க துஷாந்த் ஹேமந்த, மொஹமட் நபி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தியுள்ளனர்.

—————–

லங்கா பிரிமியர் லீக் தொடரின் 16 ஆவது போட்டி தற்போது தம்புள்ளை சிக்சர்ஸ் அணிக்கும் கோல் மார்வெல்ஸ் அணிக்கும் இடையில் வருகின்றது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ள நிலையில் கோல் மார்வெல்ஸ் அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *