லங்கா பிரிமியர் லீக் தொடரின் 17 போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் கொழும்பு ஸ்டைக்கேர்ஸ் அணியும் ஜப்னா கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு ஸ்டைக்கேர்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்ய ஜப்னா கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
அதன்படி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் பெரிதாக சோபிக்க தவறியதை அடுத்து 14 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து ஜப்னா கிங்ஸ் அணி 75 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனை தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் ஜப்னா கிங்ஸ் அணி 9 விக்கெட்களை இழந்து 109 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ஜப்னா கிங்ஸ் அணி சார்பாக வியகாந்த் விஸ்காந்த் அதிகபட்சமாக 25 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க பந்துவீச்சில் சதாப் கான் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
இந்நிலையில் 110 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி கொழும்பு ஸ்டைக்கேர்ஸ் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது.
4.2 ஓவர்கள் வீசப்பட்டபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தாமதமாக ஆரம்பமாகியது. இதன்போது கொழும்பு அணி ஒரு விக்கெட்டினை இழந்து 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டிருந்தது.
இதன் பின்னர் போட்டி ஆரம்பமாகி 6 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட் மாத்திரம் இழந்த நிலையில் கொழும்பு அணி 66 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இறுதியில் 10 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை கடந்தது. இறுதியில் கொழும்பு அணி 9 விக்கெட்களால் வெற்றிபெற்றது.
——
லங்கா பிரிமியர் லீக் தொடரின் 17 போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் கொழும்பு ஸ்டைக்கேர்ஸ் அணியும் ஜப்னா கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு ஸ்டைக்கேர்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்ய ஜப்னா கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
அதன்படி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் பெரிதாக சோபிக்க தவறியதை அடுத்து 14 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து ஜப்னா கிங்ஸ் அணி 75 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனை தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் ஜப்னா கிங்ஸ் அணி 9 விக்கெட்களை இழந்து 109 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ஜப்னா கிங்ஸ் அணி சார்பாக வியகாந்த் விஸ்காந்த் அதிகபட்சமாக 25 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க பந்துவீச்சில் சதாப் கான் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
இந்நிலையில் 110 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி கொழும்பு ஸ்டைக்கேர்ஸ் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.
—–
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி முதல் 6 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 42 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் அவிஷ்க பெர்னாண்டோ ஆட்டமிழக்காமல் 8 ஓட்டங்களையும் அணித்தலைவர் சரித் அசலங்க 13 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி சார்பாக பினுர பெர்னாண்டோ இரண்டு விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
——–
லங்கா பிரிமியர் லீக் தொடரின் 17 போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் கொழும்பு ஸ்டைக்கேர்ஸ் அணியும் ஜப்னா கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு ஸ்டைக்கேர்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்ய ஜப்னா கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது.