இலங்கை – இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் எதிர்பார்ப்பு மிக்க தொடர் : போட்டி அட்டவணை வெளியீடு

இலங்கை மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்று பயணத்திற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இந்த மாத இறுதியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்கு இடையில் முதலாவதாக நடைபெறும் ரி 20 தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 27 ஆம் திகதி கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரமபமாகின்றது.

இதனை தொடந்து 2 ஆவது போட்டி 28 ஆம் திகதி 3ஆவது போட்டி 30 ஆம் திகதியும் கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறுகின்றது.

இதனை தொடர்ந்து நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஓகஸ்ட் இரண்டாம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகின்றது.

இரண்டாவது ஒருநாள் போட்டி 4 ஆம் திகதியும் 3 ஆவதும் இறுதியுமான போட்டி 7 ஆம் திகதியும் நடைபெறுகின்றது.

கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *