அனைவருக்கும் கிடைத்திருக்கும் ஒரு நற்செய்தி – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதில் இலங்கை அடைந்துள்ள வெற்றியானது நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் கிடைத்திருக்கும் ஒரு நற்செய்தி என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆபத்தான நிலையில் இருந்த இலங்கையை பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளதாகவும் பாதை தவறினால் ஏற்படும் ஆபத்தை தாம் நன்கு அறிவோம் என்றும் கூறியுள்ளார்.

வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதில் இலங்கை அடைந்துள்ள வெற்றியானது நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் கிடைத்திருக்கும் ஒரு நற்செய்தி என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அண்மைய வரலாற்றில், உலகில் எந்த ஒரு நாடும் இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தகைய தனித்துவமான வெற்றியைப் பெற்றதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  தெரிவித்துள்ளார்.

இந்தப் பயணத்தை சீர்குலைக்க முயன்றவர்கள் எதிர்காலத்தில் ஒரு நாள் நாட்டுக்கு துரோகம் செய்ததற்காக மக்கள் முன்னிலையில் அவமானப்பட்டு நிற்பார்கள் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கடனை செலுத்த முடியாமல் வங்குரோத்தான நாடென்று முத்திரை குத்தப்பட்ட ஒரு நாடு இரண்டு வருடங்களில் இந்தளவு முன்னேற்றத்தைப் பெற முடிந்திருப்பது வெற்றி எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் மக்கள் எடுக்கும் தீர்மானம் தனியொரு நபரான தனது எதிர்காலத்தை தீர்மானிக்காது என்றும் அது  நாட்டினதும் எதிர்கால சந்ததியினரது எதிர்காலத்தையுமே தீர்மானிக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இதேநேரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உரையைத் தொடர்ந்து, பல நகரங்களில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது