உலகக் கிண்ண தொடரில் கலந்து கொண்ட இலங்கை அணி வீரர்கள் இரவு விடுதிகளில் பொழுதைக் கழித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிரூபித்து காட்டுமாறு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சவால் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை அணி வீரர்கள் நள்ளிரவு 12 மணிக்கு வெளியே சென்றுவிட்டு, மறுநாள் அமெரிக்காவில் பயிற்சிக்கு சென்றதாக முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறுவதை நான் பார்த்தேன்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது இந்த வீரர்கள் ஒரு நைட் கிளப்பில் அல்லது பார்ட்டியில் இருந்தனர் என்பது தொடர்பாக யார் வேண்டுமானாலும் நிரூபிக்கலாம். அப்படி செய்தால் நான் ராஜினாமா செய்வேன்.
விளையாட்டுத்துறையில் அனுபவம் இல்லாதவர்கள் சமூக வலைதளங்களில் வீரர்களை விமர்சிப்பதும், அவதூறாகப் பேசுவதும் சரியான நடவடிக்கையல்ல.