டயானா கமகே நீக்கப்பட்டதையடுத்து வெற்றிடமான பாரளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முஜிபர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த பரிந்துரையை ஏற்று தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
டயானா கமகேவின் பதவி நீக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டது.
1981ஆம் ஆண்டின் முதலாம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் இந்த அறிவிப்பை வழங்கினார்.