சுற்றுலாத் துறையானது வளர்ச்சியடைந்துள்ளது – ஹரின் பெர்னாண்டோ
இலங்கையின் சுற்றுலாத் துறையானது குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது என்றும் இம்மாதத்தின் முதல் 20 நாட்களில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த மாதத்தில் 182,724 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என இலக்கு வைத்துள்ளதாகவும் சுற்றுலாப் பயணிகளின் வருகையின் தொடர்ச்சியான வேகம், தொழில்துறையின் பின்னடைவு, வரவிருக்கும் மாதங்களில் நீடித்த வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
மாதத்தின் முதல் 18 நாட்களில் 16 ஆயிரத்து 222 பேர் இந்தியாவில் இருந்தும் இதனை தொடந்து பிரித்தானியா, ரஷ்யாவில் இருந்தும் ஜெர்மனி, பிரான்ஸ், அவுஸ்ரேலியா, சீனா, அமெரிக்கா, இஸ்ரேலில் இருந்தும் பலர் நாட்டுக்கு வருகைதந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 7 இலட்சத்து 40 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.