ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உமா ஓயா அபிவிருத்தித் திட்டத்தைத் திறந்து வைப்பதற்காக ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி 24 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்வதாக அறிவித்துள்ளது.
அவரது விஜயம் குறித்த நிச்சயமற்ற தன்மை நிலவி வந்த நிலையில் அரசாங்க தகவல் திணைக்களம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியின் அழைப்பை ஏற்று ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி இன்று இஸ்லாமாபாத்திற்கு விஜயம் செய்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி பாகிஸ்தானுக்கு விஜயம் செய்கின்றார்.
பாகிஸ்தானுக்கான விஜயத்தை முடித்துக்கொண்டு ஈரான் ஜனாதிபதி, இலங்கைக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என முன்னதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.